தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக, வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் டாக்டர் திரைப்படம், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயலான் மற்றும் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்தபோது, ரூ. 2000 ஆயிரம் தான் சம்பளமாக வாங்கி வந்துள்ளாராம்.
இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அப்போது ரூ. 2000 மட்டுமே வாங்கி வந்துள்ளார் எனும் செய்தி, சமூக வலைதளத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.