பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து த்ரில்லர் படத்தை ஒன்றை இயக்கியிருந்தார் ரஞ்சித் ஆனால் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் இவர் நடிகர் சந்தீப் கிஷனை வைத்து மைக்கேல் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.நடிகர் விஜய் சேதுபதி ஸ்பெஷல் அப்பியரன்ஸில் நடிக்கும் இந்த படத்தில் தற்போது புதிதாக வில்லன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது படக்குழு.
இப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார் என தகவலுடன் கூடிய போஸ்டரை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் மைக்கேல் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரிக்கிறது.
CU