ரஸ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் காயங்களுடன் பிடிபட்டுள்ளார்.
அந்த மாணவர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் காட்சிகள் பல்கலைக்கழக சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளன.
மேலும், இவருக்கு பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
பெர்ம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் காயங்களுடன் பிடிபட்டான்.
இதன் காரணமாக ரஸ்யாவில் துப்பாக்கி விற்பனை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் புதிய கொள்கைகளை வகுக்க அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.