கேரளாவில் நடந்த சாலை விபத்தில் முன்னாள் கேரள அழகியும் அவரது தோழியும் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருவணந்தபுரத்தை சேர்ந்த அன்சி கபீர், 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர்.
இவரது தோழி அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர் 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் 2-ம் இடம் பிடித்தவர்.
நெருங்கிய தோழிகளான இருவரும் தங்களது ஆண் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினர்.
இதில் தோழிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஃபோட்டோஷூட் முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளனர்.
அப்போது கட்டுப்பாடை இழந்த கார், சாலையில் அதிவேகமாக ஓடியதில் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கார் விபத்து நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன், “இது போக வேண்டிய நேரம்” என அடர்ந்த காட்டுக்குள் நடந்து செல்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள், மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.