கனடாவில் பொலிசாரால் கொல்லப்பட்ட இளம்பெண் தொடர்பில் இதுவரை தமக்கு நீதி கிடைக்கவில்லை என தாயார் ஒருவர் தமது வலியை பகிர்ந்துள்ளார்.
அதிகார வர்க்கம் நம்மை துச்சமாகவும் மதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மார்த்தா மார்ட்டின், நியூ பிரன்சுவிக் பொலிஸ் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை ஏமாற்று வேலை என நிராகரித்துள்ளார்.
எட்மண்ட்ஸ்டன் பொலிஸ் அதிகாரியால் Chantel Moore கொல்லப்பட்ட விவகாரத்தில் எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே நியூ பிரன்சுவிக் பொலிஸ் கமிஷன் குறிப்பிட்டுள்ளது.
மேலும், போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், இதனால் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி Jeremy Son பணிக்கு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பூர்வக்குடி பெண்ணான 26 வயது Chantel Moore கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 ம் திகதி Jeremy Son என்ற பொலிஸ் அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Chantel Moore நலமாக இருக்கிறாரா என விசாரிக்க சென்ற இடத்திலேயே குறித்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது Moore கத்தியுடன் எதிர்கொண்டதால், தற்காப்புக்காக பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
பொலிசாரின் இந்த அறிக்கை ஏற்புடையாக இல்லை எனவும், முதலில் ஏமாற்றத்தையும் பின்னர் கோபத்தையும் ஏற்படுத்தியதாக Moore-ன் தாயார் மார்த்தா மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
CM