லண்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் இடையே பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா தலைநகரான லண்டனில் பெக்ஸ்லி ஹீத் எனும் இடத்தில் வீட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் திருகோணமலை சேர்த்த ஓரே குடும்பத்தை சேர்த்த நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று (18) இரவு பிரித்தானியா நேரம் இரவு 8 .30 இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாயும் மகளும் மற்றும் மகளின் இருபிள்ளைகளுமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்த அந்நாட்டு பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
மேலும் தற்போது தீ விபத்தில் சிக்கி உயிரிழ்ந்த இலங்கை தமிழ் குடும்பத்தின் புகைப்படம் வெளியாகியுள்ள்து. இதேவேளை சம்பவ இடத்தில் அப்பகுதிகள் மக்கள் மற்றும் பலர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
CM