2003 மார்ச் 1ம் தேதி, பாகிஸ்தான் உளவு அமைப்பான இன்டர்சர்வீசஸ் இன்டலிஜென்சை (ஐ.எஸ்.ஐ.) சேர்ந்த இரண்டு டஜன் உறுப்பினர்கள், காலித் ஷேக் முகமதுவை கண்டோன்மென்ட் நகரமான ராவல்பிண்டியின் ஒரு வீட்டில் இருந்து கைது செய்தனர். அமெரிக்க நகரங்கள் மீதான செப்டம்பர் 11 தாக்குதல்களை திட்டமிட்டதாக காலித் ஷேக் முகமது மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
9/11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ‘உளவுத்துறை ஒத்துழைப்பு’ ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, அல்-காய்தாவுடன் தொடர்புடைய கூறுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைய முயன்ற நேரத்தில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
“ஆப்கானிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தால் பாகிஸ்தான் அதில் இடம்பெற்றுள்ளது. காபூலில் தாலிபன்கள் ஆட்சி அமைத்தாலும், உலகம் எங்களைப்பார்க்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் வெளியேற்றப்படும் சம்பவம் நிகழ்ந்தால் எங்கள் உதவி தேவைப்படுகிறது. நீங்கள் எந்த விஷயத்தைப் பார்த்தாலும் அதில் எங்கள் முக்கியத்துவம் தெரியும்.”என்று அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு , ஐஎஸ்ஐ யின் அப்போதைய தலைமை இயக்குனர் இரண்டு முறை காபூலுக்குச் சென்றார். அங்கு அவர் மூத்த தாலிபன் தலைவர்களை சந்தித்தார். அதே சமயம் ஆப்கானிஸ்தான் நிலவரத்தை மையமாக வைத்து பாகிஸ்தான், வாஷிங்டனில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 1979 முதல் 2021 வரை, ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் பாகிஸ்தான் மீது அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கையாள்வதில் ஐ.எஸ்.ஐ. மும்முரமாக இருந்தது.
THX-BBC