இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்பு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரியநேசன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் Friendhsip படத்தில் நடித்திருந்தார் லாஸ்லியா.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் அர்ஜுன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷுடன் இணைந்து நடித்திருந்த இந்த படத்தை JPR, ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர்.
படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையென்றாலும் லாஸ்லியாவை ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது Friendship திரைப்படம்.
இந்நிலையில் தான் யாரும் இதுவரை பார்த்திடாத லாஸ்லியாவின் பள்ளிப்பருவ வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
CU