நீர் கட்டணங்களை பொதுமக்கள் தாமதமின்றி செலுத்துமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் பொது முகாமையாளர் திலின எஸ்.விஜேதுங்க இதனைத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்களுக்கு தங்களுக்கான நீர் கட்டணங்களை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாமல் போயிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே நீர் கட்டணங்களை இயன்றவரை தாமதமின்றி செலுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா காரணமாக அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார செயற்பாடுகள் காரணமாக நீர் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.