இந்திய சந்தையில் நாய்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ததுள்ளது.
நாய்ஸ்பிட் கோர் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நாய்ஸ்பிட் கோர் ஸ்மார்ட்வாட்ச்- சார்கோல் பிளாக் மற்றும் சில்வர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது அதன்படி,
- இதில் 1.28 இன்ச் டிஸ்ப்ளே
- சின்க் அலாய் பாடி, 24×7 இதய துடிப்பு சென்சார்
- 13 ஸ்போர்ட் மோட்
- இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
- 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி
- இதய துடிப்பு ,உறக்கம் உள்ளிட்டவைகளை டிராக் செய்கிறது.
- இதில் உள்ள 285 எம்.ஏ.ஹெச். பேட்டரி 7 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.
- ஸ்டாண்ட்பை மோடில் இந்த வாட்ச் 30 நாட்களுக்கான பேக்கப் வழங்கும்.
- நாய்ஸ்பிட் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்துகொள்ளும் வசதி