தென்னிந்திய நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு சமீபத்தில் விவாகரத்து ஏற்பட்டது.
இந்த விஷயம், சமந்தாவின் ரசிகர்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வரும் நடிகை சமந்தா, படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் தற்போது தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார் என்று தகவல் கூறுகின்றனர்.
இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு இதுவரை எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் கிடைக்காத கெளரவம் கிடைத்துள்ளது.
அதாவது, கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் பேசுவதற்கான சிறப்பு அழைப்பாளராக சமந்தா அழைக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்த வாய்ப்பை பெறும் நடிகை என்கிற பெருமை சமந்தாவுக்கு கிடைத்துள்ளது.
இதற்காக பல ரசிகர்கள் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
CU