தலிபான்கள் இரக்கமற்ற குழுவென விமர்சித்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் மார்க் மில்லி, அவர்களின் செயற்பாடுகளில் எதிர்காலத்தில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் ஐ.எஸ் – கே பயங்கரவாத அமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை தலிபான்களுடன் இணைந்து முன்னெடுக்க முடியும் என ஜெனரல் மார்க் மில்லி குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிகாத் ஆயுத தாரிகளின் மிகவும் தீவிரமான மற்றும் வன்முறை மிக்க குழுவாக ஐ.எஸ் – கே ஆயுத தாரிகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.