பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தற்போது சின்னத்திரையில் வில்லியாக பிரபலமானவர் நடிகை பரினா.
இவருக்கு சமீபத்தில் தான், அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த சந்தோஷ செய்தியை பரினாவின் கணவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுருந்தார்.
பிரசவத்திற்கு பின் இன்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பரினாவின் கணவர் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் தனது மகன் குறித்து அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், தனது மகனை கடைசியாக வயிற்றில் சுமந்த அழகிய தருணத்தை குறிப்பிட்டு, இந்த வீடியோவை நடிகை பரினா வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
CU