தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமான சூர்யா தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டு மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் மாஸ் வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது துபாய்யில் பிரேக் எடுத்து வரும் சூர்யா அங்கு தனது புதிய கெட்டப்பில் ரசிகர் ஒருவருடன் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. பாலா இயக்கத்தில் சூர்யா 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
CU