தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
இப்படத்தின் தோல்வி காரணமாக தமிழில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறிய நடிகை பூஜா, தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார்.
அங்கு தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, பாலிவுட் திரையுலகிலும் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.
மேலும் தற்போது விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களின் பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துடன் இருக்கும் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பூஜா பெற்றுள்ளாராம்.
அங்கு படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுடன், பூஜா ஹெக்டே எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, அவரே தன்னுடைய சாம், சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
CU