குழந்தைகள் என்றால், யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நவம்பர் 14, 1889
இல் பிறந்தார். இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்ததால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் நேருவை பாசமாக ‘நேரு மாமா’ என்று அழைத்தனர். அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். நவம்பர் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
ஒரு தேசத்தின் உண்மையான பலமாகவும் சமூகத்தின் அஸ்திவாரமாகவும் குழந்தைகளை கருதினார் நேரு. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் அவர்களது முன்னேற்றத்தில் அவர் காட்டிய அக்கறை ஆகியவற்றின் காரணமாக அவரது பிறந்த நாளை இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை உங்களுக்கு பிடித்த குழந்தைகளுக்கு தெரிவியுங்கள்.
BS