வெளிநாடுகளுக்கு தொழில் புரியச் செல்வோர் கட்டாயமாக தம்மை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அந்தப் பணியகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு தம்மைப் பதிவு செய்து கொள்வதால், வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னர், ஏற்படக் கூடிய பல பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு கிடைக்கும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாது, வெளிநாடுகளுக்கு தொழில்களுக்குச் சென்று பிரச்சினைகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சரியான பதிவுகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கு உதவி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பிரச்சினைகளை எதிர்நோக்குவோர் மற்றும் உயிரிழக்கும் நபர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டம் நடைமுறையில் உள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இந்தக் காப்புறுதியைப் பெறாது, பதிவு செய்யாது வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்று பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியோர் மற்றும் உயிரிழப்போரை நம்பி வாழ்வோருக்கு நியாயம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடுகளை வழங்குவதற்காக நலன்புரி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தொழிலாளர்களை நம்பி வாழும் 22 பேருக்கு 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
IBC