இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் என்பவற்றை முறையே 5.00% மற்றும் 6.00% ஆக அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
IBC