ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி நகரமான ஜலலாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்த கூறப்படுகின்றது.
இத்தாக்குதல் குறித்து நங்கர்ஹார் மாகாண செய்தி தொடர்பாளர் காரி ஹனிஃப் கூறுவாதவது, “ இன்று டிரெய்லி நகரத்தில் உள்ள மசூதியின் உள்பகுதியில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டு இருந்த 15 பேர் காயம் அடைந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்தப் பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடிக்கடி தலீபான்களுடன் சண்டையிட்டு வருவதனால் இந்த குண்டு வெடிப்பு யாரால் நடாத்தப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
CM